மரணித்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாமா?

ஒரு மனிதன் தனக்காகவும், தன் குடும்பத்தார்கள் சார்பாகவும் உழ்ஹிய்யா கொடுக்கலாம்.

இதில் உயிரோடு இருப்பவர்களும் மரணித்தவர்களும் அடங்குவார்கள்.

நபி(ஸல்) அவர்கள் தங்களின் சார்பாகவும், தங்கள் குடும்பத்தார்கள் சார்பாகவும்  உழ்ஹிய்யா கொடுத்துள்ளார்கள்.

📚{ஆதாரம்: முஸ்லிம் 5203}

🔖ஆனால் இன்னார் சார்பாக என்று மரணித்தவர்களுக்கு  குறிப்பாக்கி கொடுத்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

📌 வஸிய்யத் நிறைவேற்றப்பட வேண்டும்

தன்னுடைய மரணத்திற்குப் பின் தனது செல்வத்திலிருந்து உழ்ஹிய்யா கொடுக்க வேண்டும் என்று ஒருவர் வஸிய்யத் செய்திருந்தால் அதனை நிறைவேற்ற வேண்டும்.

வஸிய்யத்தை (மரண சாஸனத்தை)க் கேட்ட பின்னர், எவரேனும் ஒருவர் அதை மாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

📖 {2:181}

மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் சொத்து பங்கீடு செய்ய வேண்டும்

📖{4:12}

🔖ஸதக்கத்துல் ஜாரியா என்ற அடிப்படையில், உயிரோடு இருப்பவர்கள், மரணித்தவர்களுக்காக உழ்ஹிய்யா கொடுக்கலாம் என்று ஹனஃபி மத்ஹபை சார்ந்த சில அறிஞர்கள் கருதுகிறார்கள்.

🔖என்றாலும் நபி(ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்து இதற்கு நேரடியான எந்த ஆதாரமும் இல்லை.

🔖நபி(ஸல்) அவர்களின் நெருங்கிய உறவினரான, உஹதுப் போரில் ஷஹீதான ஹம்ஸா (ரழி) அவர்களுக்கோ, நபி (ஸல்) வாழ்நாளில் மரணித்து விட்ட, திருமணம் முடித்த மூன்று பெண்குழந்தைகளுக்கோ, சிறு வயதில்  மரணித்து விட்ட மூன்று ஆண் குழந்தைகளுக்கோ, மனைவிமார்களில் தனக்கு மிகவும் விருப்பமான கதீஜா (ரழி) அவர்களுக்கோ  உழ்ஹிய்யா கொடுத்ததாக எந்த  ஆதாரமும் இல்லை.

🔖ஸஹாபாக்களின் காலத்திலும் எந்த ஒரு  ஸஹாபியும் மரணித்து விட்ட ஸஹாபிக்காக உழ்ஹிய்யா கொடுக்க வில்லை.

👆🏻 அல்லாஹ்வே மிகவும் அறிந்தவன்

✍🏽தொகுப்பு: யாஸிர் ஃபிர்தௌசி
அல்ஜுபைல் தஃவா நிலையம்,
சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *