தொடர்-10 : ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்

ஹஜ்ஜுக்கு செல்பவர்கள் பேணவேண்டிய ஒழுக்கங்களும் தவிர்க்க வேண்டிய தவறுகளும்

ஹஜ்ஜில் வழங்கப்படும் ஹதிய்(குர்பானி)யோடு தொடர்புடைய தவறுகள்

✍🏿ஹஜ்ஜில் வழங்கப்படும் (ஹதிய்)குர்பானிப் பிராணியின் விஷயத்தில் மார்க்கத்தின் நிபந்தனைகள் பேணப்பட வேண்டும்.

✍🏿வயது பூர்த்தி அடைந்ததாக, அனைத்து விதமான குறைபாடுகளை விட்டும் நீங்கியதாக இருக்க வேண்டும்.

✍🏿அறுக்கப்படும் பிராணி அதற்குரிய நேரத்திற்கு முன்பாக அறுப்பது. இதுவும் ஹஜ்ஜில் ஏற்படும் தவறாகும்❌

✍🏿குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நேரத்தை ஒரு முஸ்லிம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும்.

✍🏿(யவ்முன் நஹ்ர்) துல்ஹஜ் பிறை 10வது நாளில் பெருநாள் தொழுகை முடித்த நேரத்திலிருந்து, மினாவில் தங்கி இருக்கும் (ஐய்யாமுத்தஷ்ரீக்) துல்ஹஜ் பிறை 11, 12, 13 ஆகிய நாட்களில் 13 வது நாளில் சூரியன் மறைகின்ற வரை அறுத்துப்பலியிடலாம்.

✍🏿ஹரமின் எல்லைகளுக்கு வெளியே அறுத்துப் பலியிடுவது தவறு.❌
உதாரணமாக ஹாஜிகள் அரஃபாவில் அறுத்துப் பலியிடுவது… இதுவும் மிகப்பெரும் தவறாகும்.

✍🏿யார் இத்தவறை செய்கின்றார்களோ, அவர்கள் தங்களின் தவறுக்குப் பரிகாரமாக ஒரு பலிப்பிராணியை அறுக்க வேண்டும்.

🔖 குறிப்பு
குற்றப்பரிகாரம் என்ற அடிப்படையில் அறுத்துப் பலியிடுதலை எவர் மீது மார்க்கம் விதியாக்கியுள்ளதோ அக்குற்றத்தை செய்தவர் அதிலிருந்து எதையும் உண்ணக்கூடாது. அவை முழுமையாக ஏழைக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும்

தயாரிப்பு: 
மௌலவி யாஸிர் ஃபிர்தௌசி

அல்ஜுபைல் தஃவா நிலையம்,

சவூதி அரேபியா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *